சென்னை கோயம்பேடு பழமார்க்கெட் பகுதியில் இரண்டு பெண்கள் பழங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நள்ளிரவில் புகுந்த இரண்டு பெண்கள் கையில் வைத்திருந்த பைகளில் பழங்களை அள்ளிப்போட்டுச் சென்றனர். இதனால் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக கவலை தெரிவித்த வியாபாரிகள் மார்க்கெர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.