மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதாகவும், சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.