தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, குடிநீர் வழங்க கேட்டு காலிக் குடங்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் தஞ்சை - திருக்காட்டுப்பள்ளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செந்தலை கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் கடந்த 1 மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், குடிநீர் குழாயில் வரும் தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.