மயிலாடுதுறை பெசண்ட் நகர் பகுதியில் குடிநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற நகர நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம் குடங்களில் தண்ணீரை பிடித்து காட்டி, இதை எப்படி குடிப்பது? என பெண்கள் கேள்வி கேட்டனர்.