வேட்டையன் படத்தில் இடம்பெற்ற காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள லெட்சுமி தியேட்டரை பெண்கள் மற்றும் சிறுவர்கள் முற்றுகையிட்டனர். ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி லட்சுமி தியேட்டரை காந்திநகரை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களுக்கும் தியேட்டர் நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. படத்திலிருந்து அக்காட்சியை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.