சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணவன் கண்முன்னே மனைவியின் காதை அறுத்து ஒரு சவரன் தங்க காதணியை பறித்து சென்ற நபரை, ஓராண்டிற்கு பிறகு போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒடுவன்பட்டியை சேர்ந்த சின்னையா வீட்டிற்குள் அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்து நுழைந்த மர்மநபர், சின்னையாவை மிரட்டி ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு, அவரது மனைவியின் ஒரு காதை அறுத்து காதணியை எடுத்துள்ளான். மேலும் மற்றொரு காதில் இருந்த காதணியையும் பறித்து கொண்டு தப்பி சென்றான். இந்நிலையில் சிங்கம்புணரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த புதுக்கோட்டையை சேர்ந்த கலையரசனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, சரஸ்வதியின் காதை அறுத்து நகை திருடியதை ஒப்புக்கொண்டான்.