அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், தனது மனைவியுடன் கால்நடைக்கு தேவையான தீவனம் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி, அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.