விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்த போதும், மேனுவலாக கால் பகுதியில் லாக் செய்யாததால் அப்பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.