வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் மீது அதே ஆட்டோ ஏறி உயிரிழந்தார். செம்பேடு பகுதியில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலைக்கு ஆட்டோவில் வேலைக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.இந்நிலையில் ஆட்டோவில் பயணம் செய்த சத்யா ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த நிலையில் அதே ஆட்டோ அவர் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. சத்யா சம்பவ இடத்திலே உயிரிழந்தார், அவருடன் பயணம் செய்த ரஞ்சனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.