நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனிப்பட்டா வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சர்வேயர் பூபதி, கொல்லப்பட்டியை சேர்ந்த விஜயகுமாரியிடம் தனிப்பட்டா வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.