ஈரோடு மாவட்டம் புங்கம்பாடியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பெருந்துறையை சேர்ந்த மஞ்சு என்பவர், தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக புங்கம்பாடி விஏஒ ஜெயசுதாவை அணுகிய போது 2 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்சமாக கேட்டுபெற்றார்.