தங்களை அவமதித்ததாக கூறி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மகளிர் இலவச பேருந்தை பெண்கள் வழிமறித்து நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் இருந்து மெயின் அருவிக்கு செல்வதற்காக பெண் ஒருவர் இரு குழந்தையுடன் மகளிர் இலவச பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது, இந்த பேருந்தில் ஏற வேண்டாம் என்று நடத்துநர் அலட்சியமாக பேசி அவர்களை கீழே இறக்கி விட்டதாக தெரிகிறது.இதையும் படியுங்கள்: அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் பூட்டியே கிடக்கும் அவலம்... பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி கிடப்பதாக கிராமத்தினர் புகார்