நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியது. மோகனூர் அடுத்த ஒருவந்தூர் பகுதியை சேர்ந்த கன்னியம்மாள் என்பவர் , தான் வசிக்கும் வீட்டை தனது சகோதரர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்து போலீஸார் கன்னியம்மாளை உடனடியாக மீட்காமல்,அவர் தரையில் அமர்ந்து கதறி அழுவதை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.