நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் எம்.பிக்கள் முன்பு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்டாம்பாடி பகுதியை சேர்ந்த ஜிலானி என்ற பெண், கந்துவட்டி முருகன் என்பவரிடம் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கிய நிலையில் இதுவரை 13 லட்ச ரூபாயை கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி முருகன் வற்புறுத்தியதால் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் மற்றும் ஆட்சியர் துர்கா மூர்த்தி முன்பே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதையும் படியுங்கள் : மாயனூர் கதவணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கி மீனவர் உயிரிழந்த சோகம்..!