திருப்பூரில் 2-ஆவது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு பிரவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில், பிரவீன் திடீரென பிரிந்து சென்று விட்டதால், ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து வாயில் நுரைதள்ளிய நிலையில் இருந்தார்.