காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிகாலை முதலே கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று சோதனை செய்த போலீசார், மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.