கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முட்டை மற்றும் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். எம்.குண்ணத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் கோலமிட்டு, அதில் முட்டை மற்றும் எலுமிச்சம் பழத்தை வைத்து மர்மநபர்கள் பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏதேனும் மாந்திரீக வழிபாட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.