தென்காசி மாவட்டம் கொண்டலூரில் உள்ள அரசு துவக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட படிக்கட்டின் நடுவே மின்கம்பத்தின் ஸ்டே ஒயர் கம்பி வைத்து கட்டப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. ஒப்பந்தராரர் அலட்சியம் காரணமாக மாணவ, மாணவிகள் சென்று வரக்கூடிய வகுப்பறை படிக்கட்டில் ஸ்டே ஒயரை வைத்து கட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.