வானிலை மைய எச்சரிக்கை காரணமாக நெல்லையில் 10 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாட்டுப் படகுகள் கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், தோமையார்புரம் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.