வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என்பதை உறுதி செய்த அக்கட்சி தலைவர் விஜய், பாஜகவுக்கு அடங்கி போகவோ, அண்டி பிழைக்கவோ, அடிமையாக இருக்கவோ அரசியலுக்கு வரவில்லை என தெளிவுபடுத்தினார். ஈரோடு பிரச்சாரத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து, அரசியல் மேடைக்கு வந்த விஜய்யின் பேச்சு உணர்த்திய செய்தி என்ன? நிர்வாகிகளுக்கு விஜய் சொன்ன மெசேஜ் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.த.வெ.க.வின் நிலைப்பாடு கேள்விக்குறிசட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், த.வெ.க.வின் நிலைப்பாடு தான் கேள்விக்குறியாக இருந்தது. ஜனநாயகன் பட விவகாரம், கரூர் பெருந்துயரத்தில் சிபிஐ விசாரணை என அக்கட்சி தலைவர் விஜய் அடுத்தடுத்து நெருக்கடியில் சிக்கினார். இதனால், ஈரோடு கூட்டத்திற்கு பிறகு ஒன்றரை மாதங்களாக வேறு எந்த அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்காத சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அடிமை ஆக மாட்டேன் - விஜய்எடுத்ததுமே அரசியல் அழுத்தம் குறித்து பேச தொடங்கிய விஜய், அழுத்தத்திற்கெல்லாம் அடங்கி போற ஆள் தாம் இல்லை என்றார். அதாவது, கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட ரிலீஸில் பிரச்சனை என விஜய்க்கு பாஜக மூலம் அடுத்தடுத்து அழுத்தம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இருந்து என்ன அழுத்தம் வந்தாலும் அடிமை ஆக மாட்டேன் என தெளிவுபடுத்தினார். அதோடு, தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தான் பாஜகவின் நேரடி மற்றும் மறைமுக அடிமைகளாக இருப்பதாக விஜய் சாடினார்.வேலுநாச்சியாரின் உண்மை கதைஅடுத்ததாக, வருகிற தேர்தலில் தனித்து போட்டி என்பதை உறுதி செய்தார் விஜய். கூட்டணி விவகாரம் குறித்து பேசும் போது, வேலுநாச்சியாரின் உண்மை கதையை குறிப்பிட்ட விஜய், நட்பு சக்தி இல்லை என்றாலும் தொண்டர்கள் படையுடன் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். விஜய் கட்சி தொடங்கிய போது, த.வெ.க. கூட்டணிக்கு முதன்முதலில் விசிக சென்று விடும் என பேசப்பட்டு வந்தது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்ததை ஏற்று விசிக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசிகவின் முடிவு த.வெ.க.வினருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆரம்பத்தில் விஜய்யை ஆதரித்து பேசி, கூட்டணிக்கு சிக்னல் கொடுத்த சீமானும், கடைசியில் வெவ்வேறு கொள்கை எனக் கூறி பின் வாங்கினார். இதனிடையே, த.வெ.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என சொல்லப்பட்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் பேசி வந்ததால், விஜய் உடன் காங்கிரசின் கை இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவுடன் தான் மீண்டும் கூட்டணி என டெல்லி மீட்டிங்கிற்கு பிறகு காங்கிரஸ் உறுதி செய்ய, கூட்டணி கணக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி இல்லாமல் தனித்து...இது ஒரு பக்கம் இருக்க, NDA கூட்டணிக்கு விஜய் செல்வார் எனவும் சிலர் யூகங்கள் கூறி வந்தனர். கரூர் விசாரணை, ஜனநாயகன் பட விவகாரம் காரணமாக NDA கூட்டணியில் ஐக்கியமாகலாம் என பேசி வந்த நிலையில், அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய்யின் பேச்சு அமைந்துள்ளது. ஆகவே கூட்டணி இல்லாமல் தனித்து தான் தேர்தலை சந்திக்க போகிறோம் என தொண்டர்களை தயார்படுத்தும் வகையில் தான் இருந்தது விஜய்யின் பேச்சு. அதிமுகவும், திமுகவும் ஆட்சிக்கு வரவே கூடாதுஇது ஒரு பக்கம் இருக்க, வழக்கத்திற்கு மாறாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து தள்ளினார் விஜய். அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்த செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே, அதிமுக ஒரு ஊழல் சக்தி என்ற விஜய், அதிமுகவும், திமுகவும் ஆட்சிக்கு வரவே கூடாது என்றார். தனித்து போட்டி என்பதை உறுதி செய்த விஜய்க்கு, கூட்டணி கட்சிகள் பலத்தில் போட்டியிடும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சம பலத்தில் எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட விஜய்வழக்கம் போல திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என மக்கள் யோசிக்கக் கூடாது என்பதால் தான் விஜய் இரு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்து விமர்சித்து இருப்பதாக சொல்கிறார்கள். த.வெ.க.வில் தலை விரித்தாடும் உட்கட்சி பூசல் குறித்தும், செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசினார். நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட விஜய், கீழ்மட்ட நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என மாவட்ட செயலாளர்களை பார்த்து வார்னிங் கொடுத்தார். அரசியல் வேறு சினிமா வேறுவழக்கம் போல பேரறிஞர் அண்ணாவை கையிலெடுத்த விஜய், அண்ணா தொடங்கிய கட்சி சுயநலமாக மாறிவிட்டது என திமுகவையும், அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டது என அதிமுகவையும் விமர்சித்தார். அதேபோல, ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேடையில் பேசிய யாருமே ஜனநாயகன் படம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏற்கனவே, ஜனநாயகன் பட விவகாரம் குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என விஜய் கட்டளையிட்டிருந்த நிலையில், அது செயல் வீரர்கள் கூட்டத்திலும் எதிரொலித்தது. அரசியல் வேறு சினிமா வேறு என்பதற்காக அரசியல் மேடையில், படம் குறித்து பேசவில்லை. தேர்தலில் நான்கு முனை போட்டிவிஜய்யின் பேச்சு மூலம் தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது உறுதியாகியிருக்கிறது. விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை பலமாக இருந்தாலும், புதிதாக வந்த கட்சியை நம்பி யாரும் கூட்டணி சேர முன் வரவில்லை என்பதும் தெரியவருகிறது. மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுகவை எதிர்த்து தேர்தலில் களம் காணும் விஜய்க்கு, முடிவுகள் எப்படி கிடைக்கப் போகிறது என்பது போக போக தான் தெரியும். Related Link C.M.C.க்கு உதயநிதியின் புதிய விளக்கம்