அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவில் இருந்து தம்மை நீக்கினாலும் அமைதியாக தான் இருப்பேன் என தெரிவித்தார்.