நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தையும், கரடியும் அடுத்தடுத்து உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, அங்கு வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வேட்டையாடி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடி ஆகியவை அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உலா வந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் பீதியடைந்துள்ள அப்பகுதி மக்கள், அடிக்கடி உலா வரும் கருஞ்சிறுத்தை மற்றும் கரடியை, வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.