தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மூன்று இடங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத்தீயால், அப்பகுதியில் வசித்து வரும் ஏராளமான காட்டெருமைகள் மற்றும் மான்கள் உள்ளிட்டவை பாதிப்புக்கு உள்ளாகின.