நீலகிரி மாவட்டம் கூடலூர்-உதகை சாலையோரம் வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களை, மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இலையுதிர் காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த காட்டு சூரியகாந்தி மலர்கள், வெள்ளை நிறத்தில் நறுமணத்துடன் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.