தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி அருவி நீரோடையில் தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக , அருவி பகுதியில் உள்ள எட்டு அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீர்த்தேக்க தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.