தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான்பிள்ளை கிராமத்தில் வேலியை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானைகள், விளை நிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.