கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கவியருவி நவமலை சாலையில் அரசுப்பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பேருந்தை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்த யானைகள், அரைமணி நேரத்துக்கு பின்பே அங்கிருந்து கலைந்து சென்றன.