தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகளை, வனத்துறையினர் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.மேக்கரை பிரிவு வடகரையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.தகவலறிந்து வந்த கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், ஒலி எழுப்பியும்,வெடி வெடித்தும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.மேலும் யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்துவிடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.