திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பேத்துப்பாறை கிராமத்தில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.