நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்கோ காலணி பகுதியில் 2 குட்டி யானைகளுடன் மொத்தம் 5 காட்டு யானைகள் தேயிலை தோட்டப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகளால் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் கலக்கம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.