நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் அரசு பேருந்தை காட்டு யானைகள் தாக்கியதில், நடத்துநருக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் முதல் பேருந்தை ,இயக்குவதற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சென்ற போது, அவர்களை காட்டு யானைகள் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பயத்தில் பேருந்துக்குள் சென்ற நிலையில், யானைகள் விடாமல் பேருந்தை தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. அவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊர்மக்கள் யானைகளை விரட்டி, காயமடைந்த நடத்துநர் பாடலிங்கத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.