கோவை மாவட்டம் தடாகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர், காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தடாகம் அடுத்த கீழ்பதி வீரபாண்டியை சேர்ந்த மருதன் என்பவர், தன் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் மருதங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து காட்டு யானை தாக்கியது.