மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்ததால் மக்களும் சுற்றுலா பயணிகளும் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். உணவு தேடி உலா வந்த காட்டெருமை, சாலைகளில் திரிந்த ஆடுகளை விரட்டியது. கடந்த சில மாதங்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவதால் மக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.