காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவன் மீது மனைவி கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தேவா. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், சென்ட்ரிங் வேலை செய்து வந்த தேவா, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த தேவா மனைவி முத்துச்செல்வியுடன் தகராறில் ஈடுபட, அதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் கணவர் மீது கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.