மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதால், அவர்களது மகள் மற்றும் மகன் நிற்கதியாக வாழ வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பராசக்தி நகரை சேர்ந்த தாமோதரன் மாரடைப்பால் உயிரிழந்த சோகத்தில் இருந்த மனைவி ரூபாவதி, தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.