திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக ஆவடியில் 53 மில்லி மீட்டரும், கும்மிப்பூண்டியில் 40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இரவு பகலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு பெய்த மழையால், எளாவூர், சின்ன ஓபுளாபுரம், பெத்திக்குப்பம், சிந்தலகுப்பம், கும்மிடிப்பூண்டி சிப்காட், கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.