ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக காற்றுடன் சாரல் மழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அந்தியூர், அம்மாபேட்டை, தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், வெள்ளிதிருப்பூர், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.