தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள், நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடையும் நிலை உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மழைநீர் தேங்காத வகையில் காங்கிரீட் தளம் அமைத்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.