விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில், பிற்பகலில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே தயக்கம் காட்டினர்.