புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கல்லாலங்குடி, பாச்சிக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சிரமத்தை சந்தித்தனர்.