சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக அரைமணி நேரம் பெய்த கனமழையால், பூந்தமல்லி அருகே வரதராஜபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் புகுந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதேபோல, பூந்தமல்லி ட்ரங்க் சாலை மற்றும் பாரிவாக்கம் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.