கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் விஜய்யின் த.வெ.க-வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில சுயாட்சிக்கு முதல் மாநிலமாக திகழும் தமிழ்நாடு அனைத்திலும் முன்மாதியாக உள்ள நிலையில், ஏன் மதுவிலக்கிலும் முன்மாதிரியாக இருக்ககூடாது என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து பேசிய அவர், மது ஒழிப்பில் விஜய்க்கு உடன்பாடு இருந்தால் இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்தார்.