பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே செல்லாத நான் தமிழக வெற்றி கழகத்துடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.