தவெக தலைவர் விஜய்-க்கு அரசியல் கட்சியின் தலைவர் என்பதையும் தாண்டி, கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால்தான், அவருக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார். ரசிகர்கள் தொண்டர்களாக மாறி இருப்பதால், தற்போது விஜய்க்கு ஆதரவு இருக்கும் என்றவர், மக்கள் நம்பிக்கையை பெற புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.