க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற திமுகவின் பவள விழாவில் பேசிய அவர், மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகவும் இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம் திமுக தான் என பெருமிதத்துடன் கூறினார்.