தவெகவில் இணைகிறார் : ஈரோட்டில் உள்ள ஜனனி திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து பேட்டி அளித்த அவர், நாளை தமிழகத்தை ஆளப்போவது மட்டுமின்றி வரும் 2026 இல் தேசியக் கொடியை ஏற்றி வீறு நடை போகிறவர் தளபதி தான். அமெரிக்காவில் இருக்கிறவர் ,சாதாரண ஆள் இல்லை, டாப் ரோலில் இருக்கிறவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார். அவரது பெயர் சொன்னால் நன்றாக இருக்காது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் , வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு எப்படி உருவாகும் என்ற கேள்விக்கு பதில்: சிங்கக்குட்டிகள் சீறிப்பாயும் என்றார். பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய நபர் தற்போது, அவர் அமெரிக்காவில் இருக்கிறார் அவர் டாப் லெவலில் இருக்கிறார். சாதாரண ஆள் இல்லை் பெரிய அளவில் இருக்கிறார் அதிமுகவிலும் திமுகவிலும் நட்பில் இருக்கிறார். அவர் பெயரை இங்கு குறிப்பிட முடியாது சொன்னால் நன்றாக இருக்காது. விஜய் எழுதி வைத்து பேசும் script வெளியாகி இருக்கிறதே, ? எந்த தலைவர் தான் அவ்வாறு பேசவில்லை, திமுக தலைவர் வேறு கட்சித் தலைவர் பிரதமர் கூட அப்படித்தான் பேசுகிறார்கள், வேறு யார் பார்த்து பேசாமல் இருக்கிறார்கள் தேர்தல் அறிக்கை..விரைவில் அறிவிப்போம், தேர்தலில், அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தவெக.வின் சிங்கக் குட்டிகள் சீறிப்பாயும். Related Link மாவிழியம்மன் கோயிலில் மாசி மாத படையல் விழா