சென்னை நந்தனத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை, மாநகராட்சி குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கட்டைப்பையில் குழந்தையை வைத்து, போர்வையால் சுற்றி சத்தமில்லாமல் வீசிச்சென்ற கொடூர பெண்ணையும், ஆட்டோவில் அழுதபaடியே சென்ற மற்றொரு இளம்பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.