திமுகவின் பி டீமாக செங்கோட்டையன் செயல்பட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய அரசுக்கு பல்லக்கு தூக்கி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த பி டீம் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக மக்களுக்கு ஆதரவாக பி டீம் மற்றும் சி டீம் இருந்தாலும் தவறில்லை என்றார்.