இந்த ஆட்சியில் தான் யார் அந்த சார்?, யார் அந்த கார்? என்ற அனைத்துமே விடை தெரியாத கேள்வியாக உள்ளதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் பகுதியில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து பேசிய அவர், மக்களுக்கு காவல்துறையின் மீது பயமில்லாததால் தான் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.