சாவகாசமாக பைக்கில் பெட்ரோல் போட்டு விட்டு, பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்த மது போதை நண்பர்கள், சொந்த காசில் சூனியம் வைக்கும் விதமாக, வசமாக சிக்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்தபோது, போதை ஆசாமியின் சரித்திர பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகில், திருத்தணி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. எப்போதுமே பிசியாக இருக்கும் இந்த பங்க்கிற்கு, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், பெட்ரோல் போடச் சொல்லி நின்றுள்ளனர். பங்க்கில் பணிபுரியும் சுமன் என்ற நபர் பெட்ரோல் போட்டு விட்டு, பணம் கேட்டுள்ளார். பெட்ரோல் போடும் வரை அமைதியாக இருந்த வாலிபர்கள், பணம் கேட்டவுடன் தர மறுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சுமனுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதில், பைக்கில் இருந்தவரில், ஒருவர் ஆபாசமாக, பேசி தாக்கத் தொடங்கியுள்ளார். ‘யாருகிட்ட பணம் கேட்குற... உன்ன கொன்னுடுவோம்’ என்று கூறியதோடு, சரமாரியாக தாக்கியதில், சுமன் காயமடைந்தார். இதில், போதை ஆசாமி ஒருவர் எகிறி எகிறி அடித்த நிலையில், பக்கத்தில் இருந்த அவரது நண்பனோ சமாளித்து, இழுத்துச் சென்றான். இதற்கிடையே, காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சுமனின் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அலசிய போலீஸார் போதை இளைஞர்களை அடையாளம் கண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர், PT புதூர் கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பதும், இவன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நிர்மல்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இதையும் பாருங்கள் - Petrol Bunk Attack | "என்னது காசு தரணுமா?" பெட்ரோலுக்கு பணம் தர மறுப்பு, ஊழியரை தாக்கிய இளைஞர்கள்